அவ்வளவும் இந்த ரெண்டு நாமா, ரெண்டு எழுத்து இருக்கும்படியான ராம நாமாவோ ஶிவ நாமாவோ எதை வேணா வெச்சுக்கோ, அப்படினுட்டு, அந்த ரெண்டு எழுத்து இருக்கே, அந்த ரெண்டு எழுத்துக்கு நிறைய கிரந்தங்கள் எழுதி இந்த ரெண்டு தான் தாரகம்னு, தாராகம்னா உன்னை தாண்ட விடறது, பாபத்துலேர்ந்து தாண்ட விடறது, ஸம்ஸாரத்துலேர்ந்து, துக்கத்துலேர்ந்து தாண்ட விடறது, துக்கத்துலேர்ந்து தாண்ட விட்டாலும் சரி, வராது போனாலும் சரி பாபத்துலேர்ந்து தாண்ட விட்டா போறும் நமக்கு. "அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸு ச: னு, உனக்கு, உனக்கு தூக்கம் வராம இருந்ததானா ஆபத்து வராம இருந்தா துக்கம் நிவர்த்தி ஆகும்னு சொல்றதுக்கில்லை, நீ பாபம் பண்ணாம இருந்தாலே உக்கு போறும். எத்தனை ஆபத்து வந்தாலும் உனக்கு துக்கம் வராது உனக்கு. ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி உன்னுடைய பாபத்துலேர்ந்து உனக்கு மோக்ஷத்தை உண்டு பண்ணிடறேன். "ஸுமாச:" அப்பதான் உனக்கு சோகம்கிறது வராது. அப்பேற்பட்ட தாரக நாமத்தை, போதேந்திராள் நாம சித்தாந்தம் பண்ணி, அதை அனுசரிச்சு ஐயவாளும், ஐயாவாள் ஶிவ நாமத்தை பத்தி விசேஷ்மாச் சொல்லி, அப்படி கொஞ்சம் மனசு லயிக்கும்படியான ஒரு மார்கத்துல பகவன் நாமாவை சொல்லிண்டு இருந்தோமானா, அது கொஞ்சம் பஜன பத்ததினுட்டு, அந்த மாதிரி ஸம்ப்ரதாயம் ஏற்பட்டிருக்கு, அதான் "ஸததம் கீர்தயந்தோ மாம் போதயந்த: பரஸ்பரம்" னு மூலத்துலேயே "அப்பா, சொல்லிண்டு இரு. ஒருத்தருககு ஒருத்தர் பேசிண்டு இரு. பத்து பேரா சேர்ந்து கோஷ்டி கானம் பண்ணு. இப்படியெல்லாம், இப்படியெல்லாம் கொஞ்சம் ஸாதகம் அதுக்கு. ஏதானும் மருந்து சாப்டறதுககு, ஏதானும் கொஞ்சம் ஒரு ஸஹாயம் ஒரு திதிப்பு, கிதிப்பு, அது, இது குடுக்கற மாதிரி, பகவான் நாமாவுக்கு இதெல்லாம் கொஞ்சம் கூட இருந்தா, கொஞ்சம் ஸுலபமாய் பகவன் நாமாவை, நாம வந்து அந்த அம்ருதத்தை அனுபவிக்க முடியும்கிறகத்துக்காக, வேறொன்னும் வேண்டாம் உனக்கு. அது ஒன்னு வெச்சிக்கோ. கடைசி ஸித்தாந்தம் " நாக்கு இருக்கு இரண்டு எழுத்து இருக்கு. சொல்லிண்டே இரு முழுக்க. அது ஒண்ணு உன்னை எல்லாத்தையும் தாண்டி விட்டுடும். இது, இது பாக்கி எல்லாம் எவ்வளவு பண்ணுமோ அவ்வளவு பண்ணிடும் இது. ஏதோ நம்மால முடிஞ்சதை வேண்டாம் னு சொல்ல வேண்டாம். முடிஞ்ச வரைக்கும் நல்ல கார்யங்கள்லாம் பண்ணிட்டு இருப்போம். பாக்கி பக்தியோ, ஞானமோ, ஸரணாகதியோ, கர்மானுஷ்டானங்களோ இதெல்லாம் பண்ணுவோம். பண்ணாலும் அதுலேர்ந்து நமக்கு வேறொண்ணும் அதிகாரம் இல்லியே, இது ஒன்னு இருக்கட்டும் நமக்குன்னு, இது ஒண்ணை கெட்டியா, குரங்கு பிடியா பிடிச்சிண்டுடு, இந்த பகவன் நாமாவை. அப்படினு உபதேஸம் பண்ணி, அதை ஸித்தாந்தம் பண்ணினவர், போதெந்த்ராள்னு கடைசீ ஆச்சார்யாள் முன்நூறு வருஷ்த்துக்கு முந்தி பண்ணினார். அவாளுடைய அனுசரிச்சு ஐயாவாள்னுட்டு அவாளும் நிறைய்ய பக்தி பண்ணி, அவாளுக்கு இப்ப கார்த்திகை அமாவாசையில தான் அவாளுடைய கங்கை வந்துது அவாளுக்குனு திருவிசலூர்ல அந்த உத்ஸவம் அவாளுக்கு. அதுக்கப்பறம் ஸத்குரு ஸ்வாமிகள்வாள்னு மருதாநல்லூர்ல அதை அனுஷ்டானத்துக்கு கொண்டு வந்து, எப்பவும் அந்த உஞ்சவருத்தி, உஞ்சவருத்தி அதுக்கப்றம் பகவன் நாமா, அந்த கீர்த்தனைகள், அந்த உத்ஸவங்கள், அவாளுடைய போதேந்த்திராளுடைய பாதுகையை ஆராதனை பண்றதுன்னு, அந்த ஸம்ப்ரதாயத்துல, ஒரு கர்மம் ஒண்ணு, மடம் ஒண்ணு, அதுலேர்ந்து, அந்த பகவன் நாம ஸித்தாந்ததுக்காகனுட்டு, போதேந்திராள் பிரதான ஆச்சார்யாளாகவும், ஐயாவாளும், அதுக்கப்பறம் அனுஷ்டான ஸத்குரு ஸ்வாமிகளும், அப்படி ஒரு பரம்பரை. இந்த போதேந்த்ராள், ஐயாவாள், ஸத்குரு ஸ்வாமிகள், இவாளோட பேரோடதான் இங்க பஜனை பத்ததில பஜனை சொல்றப்ப, இவா மூணு பேருடைய ஸ்லோகங்கள், மூணு பேருடைய கீர்த்தனைகள், இதெல்லாம் சொல்லிட்டு தன எல்லாரும் பகவன் நாம பஜனை பண்றது, பஜனை பண்றதுங்கற ஸம்ப்ரதாயமானது ஏற்பட்டு இருக்கு. வடக்க உத்திர தேஸத்துல இந்த பஜனைங்கறது, கிருஷ்ண சைதன்ய மஹா ப்ரபுனுட்டு, அவர் பங்காளத்துலயும், ஓரிஸ்ஸாவிலயும், அந்த பஜனை பத்ததி ரொம்ப விசேஷ்மா அங்க அங்க ஏற்பட்டது. நம்ம தக்ஷிண தேஸத்துல ஏற்பட்டது. போதேந்திரளுடைய அனுக்ரஹம், போதேந்த்ராள், ஐயாவாள் ஸத்குரு ஸ்வாமிகள், இந்த க்ராமத்துலேர்ந்து நம்ம தக்ஷிண தேஸத்துல பஜனை ஸம்ப்ரதாயம் ஏற்பட்டிருக்கு, வடக்கு இருக்கற அந்த பஜனை பத்ததிகளும் நாம் சேர்த்துக்கறது உண்டு. அவாளும் எல்லாம் பகவன் நாமா தானே. அதனால அவாளுடைய கிரமமும் கொஞ்சல் கொஞ்சம் சேர்த்துண்டு பண்ணிட்டு இருக்கறது. கொஞ்சம் இதே மாதிரி பஜனை, அந்த மாதிரி பண்றது மஹாராஷ்ட்ரத்துல, அவாளும், துக்காராம் அவாளெல்லாம் பஜனை பண்ணிண்டு இருந்திருக்கா. அங்கேர்ந்து உத்தர தேஸத்துல மீராபாய் பஜனை பண்ணிண்டு இருந்திருக்கா. அந்த சைதன்ய மஹா ப்ரபு தான் உத்தர தேஸத்துல நிறைய பஜனை பத்ததி ஏற்படுத்தி இருக்கார். அந்த வாசனை அடிச்சு தான் நம்ம தேஸத்துயும், இங்கேர்ந்து பஜனை பத்ததினுட்டு இருந்தாலும் ஸ்வதந்தரமா இவா ரெண்டு மூணு பேர் மஹான்கள், நம்ம தக்ஷிண தேஸத்துலேயே அவதாரம் பண்ணி, அவா ஸன்யாசிகளா போதேந்திராள், க்ருஹஸ்தாளா ஐயாவாள், இவா பாகவத ஸம்ப்ரதாயமா ஸத்குரு ஸ்வாமிகள்வாள், அவா மூணு பேரும் இந்த மாதிரி ஏற்படுத்திருக்கா. ஆகையினாலே பகவன் நாமாங்கறது ஸுலபம் நமக்கு. எப்ப நாம வேணும்னாலும் அத உபயோகப்படுத்திக்கலாம் நமக்கு ரொம்ப ஸுலாபமான உபாயம். நம்ம மதத்துல எல்லாம் கஷ்டமா இருக்கே, கடினமா இருக்காப்பல இருக்கே, யோகம், யோகம், த்யானம், ப்ராணாயமம்னு பெரிய கடினமானா இருக்கு நம்முடைய மதத்துல அப்படினு நமக்கு ஸந்தேஹமா இருந்தானா, இதை காட்டிலும் ஸுலாபமான வழியே கிடையாதுங்கறதும் நம்ம மதத்துல தான் இருக்கு. அதுனால எல்லாம் என் பிரயோஜனமோ அந்த பிரயோஜனம் இதுனால ஸுலபமா வந்துடும் அப்படினுட்டு. ஆனா அதுகள்ல ஒரு அலக்ஷிய புத்தியா, அது தப்பு, இது தப்புனு, வேஸ்ஸிண்டு மாத்திரம் இருக்காதே. வேஸ்ஸா இந்த நாமம் போயிடும், அப்படினுட்டு. நாமத்துலேர்ந்து பகவதனுக்ரகம் வீனா போயிடும். ஒண்ணயும் வையாதே நீ. அந்தந்த மார்கங்கள் சரி. நமக்கென்னமோ நமக்கு நாம் ரொம்ப அல்பம், நமக்கு இது தான் அப்படினு humble ஆ இருந்துக்கோ. அப்போ உனக்கு, இது உன்னை கடைத்தேறி விட்டுடும். அப்படிங்கற அது தான் "நாம அபராதா:தஸ" னுட்டு "நாமாஸ்தீதி நிஷித்த கர்ம விஹிதத்யாகேள" னுட்டு ஸத்கர்மாவை விடறது. கெட்ட காரியத்தை செய்யறது இதெல்லாம் பண்லாய, பண்ணிடறேன் நான், நாமா தான் இருக்கே அப்படினு அந்த எண்ணத்துக்கெல்லாம் அஹம்பாவத்தோட போகாதே. எல்லாத்துக்கும் அடி, கீழ் படியில இரு நீ. அதெல்லாம் அவாளெல்லாம் பெரிய மஹான்கள், குடுத்து வெச்சவா, நமக்கு கதியில்லையே, நாம இந்த வழியிலே போறோம் அப்படினு நினைச்சிக்கோ நீ, அப்படினுட்டு, "அந்த மாதிரி எல்லாம் பகவன் நாமா தான். ஆரக்கண்டாலும் நாமாவை சொல்லிச் சொல்லிச் சொல்லி உன்னுடைய சேஷமத்தை அடை" அப்படிங்கற மார்கத்தை போதேந்திராள் உபதேஸம் பண்ணி, அந்த மாதிரி அனுக்ரஹம் பண்ணி இருக்கா.
ராம ராம